இறுதிப்போட்டியில் மூன்று தவறான முடிவுகள்: கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

ஞாயிறு, 14 ஜூலை 2019 (18:24 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது
 
முக்கியமான இந்த இறுதிப்போட்டியில் மூன்று தவறான முடிவுகள் அம்பயர்களால் எடுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பயர் குமார தர்மசேனா முதலில், வோக்ஸ் பந்துவீச்சில், நிகோல்ஸுக்கு எம்பிடபிள்யூ என அறிவித்தார். ஆனால் ரிவ்யூவில் அது நாட் அவுட் என்று தெரிந்தது. அடுத்து, பிளங்கட் ஓவரில், வில்லியம்சனுக்கு எதிரான கேட்ச் அப்பீலை நிராகரித்தார். இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உடனடியாக ரிவ்யூ கேட்க, மீண்டும் முடிவு மாற்றப்பட்டது. 
 
இந்நிலையில் மற்றொரு அம்பய்ரான மராய் எராஸ்மஸ் அவர்களும் ஒரு தவறான அவுட் கொடுத்திருக்கிறார். ராஸ் டெய்லரை எம்பிடபிள்யூ என்று அவர் அவுட் கொடுத்த முடிவு தவறு என பால் டிராக்கிங்கில் தெரிய வந்துள்ளது. பந்து ஸ்டம்புகளைத் தகர்க்காமல், மேலே செல்கிறது. ஆனால், நியூசிலாந்தின் ரிவ்யூவை குப்தில் வீணாக்கிவிட்டதால், ரிவ்யூ எடுக்க முடியாமல் வெளியேறினார் ராஸ் டெய்லர். முக்கியமான இறுதிப்போட்டியில் அம்பயர்கள் செய்யும் தவறினால் போட்டியின் முடிவே மாறிவிடும் அபாயம் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்