பின்னர் வந்த பாண்டியாவும், ரிஷப் ப்ந்த்தும் சற்று தாக்குபிடித்தனர். இவர்களும் அவுட் ஆக அடுத்த வந்த தோனி, ஜடேஜா வெளிப்படுத்திய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை கொடுத்தனர். ஆனால், ஜடேஜா அவுட் ஆக தனியாக நின்ற தோனியும் ரன் அவுட் ஆனார்.
ஆனால், தோனியின் ரன் அவுட் நேற்றைய பெரும் துயரமாக இருந்தது. ஆனால், தோனி ரன் அவுட் ஆனாது நாட் பாலில் என தற்போது சமூக வலைத்தளங்கள் தகவல்கள் பரவிவருகின்றன.
அதாவது, 3 வது பவர் பிளே ஓவர்களான, 40 - 50 ஓவர்களில் 30 மீட்டர் வட்டத்திற்கு வெளியே, 5 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், தோனி அவுட் ஆன பந்தில் உள்வட்டத்திற்கு வெளியே 6 ஃபீல்டர்கள் நின்றிருந்துள்ளனர்.