பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் வாங் ஷி யியை எதிர்கொண்ட சிந்து, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த போட்டியில் பிவி சிந்து முதல் இரண்டு செட்டையும் வென்று, நேர் செட்களில் வாங் ஷி யியை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, பி.வி.சிந்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.