புரோ கபடி: முதல்முறையாக அரையிறுதியில் தமிழ் தலைவாஸ்

புதன், 14 டிசம்பர் 2022 (07:56 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து அந்த அணியினர் மகிழ்ச்சி உள்ளனர். 
 
புரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாட்டின் தமிழ் தலைவாஸ் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
நேற்று நடைபெற்ற உத்தரப்பிரதேச அணியுடனான போட்டியில் தமிழக அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து புரோ கபடி தமிழ் தலைவாஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்