உலகக் கோப்பை அரையிறுதியில் முதன்முறையாக மொராக்கோ அணி: இம்ரான் கான் வாழ்த்து

ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (18:26 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக மொராக்கோ  அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் போர்ச்சுக்கல் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் மொரோக்கோ அணி அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று மொரோக்கோ அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
போர்ச்சுகல் அணியை தோற்கடித்து உலகக்கோப்பை கால்பந்து அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்ற மொரோக்கோ அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் முதல் முறையாக ஆப்பிரிக்க முஸ்லிம் அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்