ஐபிஎல் 2017: முதல் போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அபார வெற்றி

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (23:52 IST)
ஐபிஎல் 2017 கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.


 


யுவராஜ்சிங், ஹெண்ரிகுயீஸ் மற்றும் தவான் அதிரடியால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது. 208 என்ற மாபெரும் இலக்கை நோக்கி விரட்டிய பெங்களூர் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் முதல் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் ஐதராபாத் உள்ளது.

இந்த போட்டியில் 62 ரன்கள் குவித்த யுவராஜ்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.,
அடுத்த கட்டுரையில்