இந்தியா இந்த உலகக்கோப்பையில் இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் 6 வெற்றி, ஒரு தோல்வி பெற்றிருக்கிறது. நியுசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. தற்போது 13 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்று அரையிறுதி வாய்ப்பையும் பெற்றுள்ளது. இன்று இலங்கையுடன் வென்றால் முதல் இடம் பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி முதல் இடம் பெற்றால் அரையிறுதியில் நியுசிலாந்து அணியை எதிர்கொள்ளும். இங்கிலாந்தை விட நியுசிலாந்து அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்குப் பலமாகும்.