என்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்… ஆட்டநாயகன் திலக் வர்மா பெருமிதம்!

vinoth

திங்கள், 29 செப்டம்பர் 2025 (08:31 IST)
நேற்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

இந்த போட்டியில் இரண்டாவதாக பேட் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பிறகு திலக் வர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் நிலைத்து நின்று ஆடி இந்திய அணி வெற்றிபெற வைத்தனர். திலக் வர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடி 53 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் பேசிய அவர் “முதலில் அழுத்தமாக இருந்தது. அவர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசி வேகத்தை அதிகப்படுத்தினர். ஆனால் நான் அமைதியாக இருக்க முயன்றேன். சஞ்சு சாம்சன் மற்றும் துபே ஆகியோரது இன்னிங்ஸ் அபாரமான ஒன்றாக இருந்தது. நாங்கள் எந்த இடத்தில் இறங்கி விளையாட வேண்டுமென்றாலும் தயாராக இருந்தோம். விக்கெட் விழுந்தபோது நான் கௌதம் சாரிடம் அதுபற்றி பேசி ஆலோசனைகள் பெற்றேன். இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. இந்த வெற்றி அனைத்து இந்தியர்களுக்குமானது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்