இந்த உலக கோப்பையில் டாஸ் வென்று பேட்டிங்கை வெஸ்ட் இண்டீஸ் தேர்வு செய்வது இதுவே முதல்முறை. பந்துவீச்சை தேர்வு செய்யும்போதெல்லாம் எதிரணிக்கான ரன் அளவை தீர்மானிக்க முடியாமல் போய்விடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு அளவுக்கு பேட்டிங்கில் வலிமை இல்லை என்பதால், இரண்டாவதாக விளையாடும்போது இலக்கை அடைவது சிரமமானதாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் இதுவரை ஆடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. ஆனாலும் கடைசி வரை அயராது விளையாடும் அவர்களது திறனை குறைத்து மதிப்பிட முடியாதுதான். அதுபோல வெஸ்ட் இண்டீஸ் இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 6 தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. எனவே இரு அணியில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. ஒரு ஆட்டமாவது வென்றுவிட வேண்டும் என்பதில் இன்று ஆப்கானிஸ்தான் உறுதியாக இருக்கும்.