மலிங்கா அதிரடி பந்துவீச்சால் இலங்கைக்கு முதல் வெற்றி

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (22:40 IST)
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்  செய்து. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் அடித்தது. குணதிலகா 30 ரன்களும், டிக்வெல்லா 24 ரன்களும், மதுஷங்கா 20 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் சாண்ட்னர் மற்றும் ஆஸ்ட்லே தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
 
இந்த நிலையில் 126 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இலங்கை அணி வெற்றி பெற்றது
 
 
இந்த போட்டியில் 3வது ஓவரை வீசிய மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி அதன்பின்னரும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும் தனஞ்செயா 2 விக்கெட்டுக்களையும், டிசில்வா மற்றும் சண்டகான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மலிங்கா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
 
 
நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்