இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுமா?

திங்கள், 30 அக்டோபர் 2023 (16:03 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வரும் நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.

 27 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 8 விக்கெட்டுக்கள் கையில் இருப்பதால் கடைசி பத்து ஓவர்களில் இலங்கை அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியின்  தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா 46 ரன்கள் அடித்து அவுட் ஆனார். மெண்டிஸ் மற்றும் சமரா விக்ரமா ஆகிய இருவரும் தற்போது நிதானமாக விளையாடி வருகின்றனர்

இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு செல்ல கூடிய வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்