உலகக்கோப்பை டி20 தகுதி சுற்றின் 6வது போட்டி: இலங்கை பேட்டிங்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (14:18 IST)
உலகக்கோப்பை டி20 தகுதி சுற்றின் 6வது போட்டி: இலங்கை பேட்டிங்!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அணிகளுக்கிடையிலான போட்டி தொடங்கியது 
 
இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தது. இதனால் இலங்கை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை அணி சற்று முன் வரை 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி ஏற்கனவே நமீபியா அணியுடன் விளையாட தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தகுதி சுற்றில் குரூப் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து அணி 2 வெற்றியை பெற்ரு 4 புள்ளிகளையும், நமீபியா அணி ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளையும் பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாவே தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்