பெண்களுக்கான உலக கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பி பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இங்கிலாந்துடன் இந்தியா மோத இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்தானது. அதனால் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி இறுதி ஆட்டத்திற்கு நேரடியாக தகுதி பெற்றது. இதே போன்று ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இரண்டாவதாக தென் ஆப்பிரிக்கா விளையாட இருந்த நேரத்தில் மழை பெய்தது. ஆனாலும் மைதான ஊழியர்கள் முயற்சியால் சீக்கிரமே மைதானம் தயாரானதால் இரண்டாவதாக பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு 13 ஓவர்களுக்கு 98 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.