தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் போட்டியை வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் செஞ்சுரியனில் நடந்தது. இந்த போட்டியில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள்.
தென் ஆப்ரிக்கா இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சொதப்ப, அவ்வப்போது ரோகித் சர்மா ஆறுதல் அளித்தார்.
ஒரு கட்டத்தில், ரோகித் சர்மா 47 ரன்களில் வெளியேற, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றி உறுதியானது. அதேபோல், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.