தென் ஆப்பரிக்காவை காலி செய்த ஷமி; இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு
செவ்வாய், 16 ஜனவரி 2018 (19:55 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி தனது இர்ண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிரது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்தது. இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி 28 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
நாளை போட்டியின் 5வது மற்றும் கடைசி நாள். ஒருநாள் முழுவதும் இருப்பதால் இந்திய அணி வெற்றிப்பெற அதிக வாய்ப்புள்ளது.