அயர்லாந்துக்கு தென்னாப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்டி பால்பர்னியின் அபார சதத்துடன் அந்த அணி முதலில் பேட் செய்த அயர்லாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது அயர்லாந்து வீரர்களின் பந்து வீச்சு.
குயிண்டன் டி காக் விளையாடாத நிலையில் மற்ற வீரர்கள் சொதப்ப 247 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரை முன்னிலை வகிக்கிறது.