இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய மார்க்கம் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரும் தலா 79 மற்றும் 74 ரன்கள் அடித்து உள்ளனர். இந்திய தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
இந்த நிலையில் 279 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இலக்கை எட்ட தீவிர முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது