பேட்டிங் செய்வதை மறந்துவிடவில்லை! – காயத்தில் இருந்து மீண்ட தவான்!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (09:02 IST)
காயத்தின் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்த ஷிகார் தவான் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தவர் ஷிகார் தவான். முஸ்தாக் அலி கோப்பை ஆட்டத்தின் போது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்திய அணியில் தொடர முடியாமல் போனது. அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டதால் எழுந்து நடப்பதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை இருந்தது. அவர் எழுந்து நடக்க முயற்சிக்கும் வீடியோக்கள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பூரண குணமடைந்துள்ள ஷிகார் தவான் 2020ல் நடைபெறும் இலங்கை மற்றும்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் பங்குபெரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நீண்ட காலம் கழித்து திரும்பியுள்ள ஷிகார் தவான் இதுபற்றி கூறுகையில் ”இது எனக்கு புதிய தொடக்கம். விளையாட்டில் காயம் ஏற்படுவது சகஜம்தான். இதற்கு முன்னரும் பலமுறை காயம் பட்டிருக்கிறேன். ஆனால் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை நான் மறந்து விடவில்லை. அந்த திறமை எனக்கு இன்னமும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மற்ற நாடுகளுக்கு எதிராக விளையாடும் முன்னர் ரஞ்சி கோப்பையில் விளையாடும் டெல்லி அணியின் கேப்டனாக விளையாட இருக்கிறார் ஷிகார் தவான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்