கடந்த வருடம், ஆளும் பாஜக அரசால், குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், 48 பேர் உயிரிழந்தனர்.இதில், அங்கித் சர்மா என்ற 26 வயதான நபர் கல்வீசி கொலை செய்யப்பட்டார். இவர் உளவுத்துறையின் ஓட்டுநராக இருந்தவர்.
இக்கொலை வழக்கில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் என்பவருக்கு தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரது வீட்டுக் கால்வாயில் இருந்துதான் அங்கித் சர்மாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.மட்டுமின்றி, தாஹிர் தனது வீட்டு மாடியில் இருந்து கற்கல் வீசுவது போன்ற வீடியோக்களும் வெளியானது.
மேலும், தாஹிர் உசை, முன் ஜாமீன் கேட்டு, டில்லியின் கர்கர்டூமா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்சு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகாததால், நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து, உடனடியாக தாகிர் உசைனை போலீஸார் கைது செய்துள்ளனர்.