சீனாவில் திடீரென குறைந்த கொரோனா வைரஸ்: இதுதான் காரணம்

வெள்ளி, 6 மார்ச் 2020 (17:40 IST)
கொரோனா வைரஸ் சீனாவை ஆட்டுவித்து வந்த நிலையில் இந்த வைரஸ் தற்போது வெகுவாக குறைந்து வருவதாகவும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து உள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இதற்கு முக்கிய காரணம் சீனாவில் கொரோனா வைரஸ் ஆக்கப்பட்டவர்கள் உளவுத்துறை மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக தனது தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் மனித நேயத்தை அவர்கள் கொஞ்சம் கூட பார்ப்பதில்லை. கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவ கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டுமே உள்ளது.
 
ஒத்துழைக்க மறுக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளை உடனே கைது செய்யவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் ராணுவமும் களத்தில் இறக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த விஷயத்தில் மனித நேயம் பார்த்துக் கொண்டிருந்தால் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சீனா கம்யூனிஸ்ட் நாடாக இருப்பதால் இது சாத்தியமானது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிட தக்கது 
 
எது எப்படியோ சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு பொதுவெளிக்கு செல்லாமல் சீன அரசு பார்த்துக் கொண்டிருப்பதால் தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும், இனி அதிகமாக பரவ வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்