டி 20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுகிறார். இந்நிலையில் அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாதான் என உறுதியாக தெரிந்தாலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.