முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை… பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல்!

புதன், 29 செப்டம்பர் 2021 (10:39 IST)
பஞ்சாப் அணி நேற்றைய தோல்வியை அடுத்து ப்ளே ஆப்க்கு செல்வதற்கான தகுதியை முற்றிலும் இழந்துவிட்டது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்  ரோஹித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் ‘ பந்துவீச்சாளர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினர். ஆனால் போதுமான ரன்கள் இல்லை. அடுத்த 3 போட்டிகளும் சுவாரஸ்யமானது. நாங்கள் முடிவுகளைப் பற்றி கவலைப்படவில்லை, ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவதுதான் பிடித்திருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்