தொடர்ந்து 8 தோல்விகள்… மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித்தின் உருக்கமான செய்தி!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:32 IST)
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி அதிக முறை கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே கவனிக்கப்படும் ஒரு அணியாக இருந்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு சீசன் அவர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் அவர்கள் இதுவரை விளையாடிய முதல் 8 போட்டிகளையும் இழந்துள்ளனர். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்தவொரு அணியுமே இதுபோல தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ்.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் “இதுபோல மோசமான காலம் எல்லா சாதனையாளர்களுக்கும் வரும்.  நாங்கள் இந்த முறை எங்களின் பெஸ்ட்டை கொடுக்கவில்லை. ஆனால் இந்த அணியின் மீதான என் காதல் எப்போதும் குறையாது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்