தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருது வென்ற ரோஹித் ஷ்ர்மா ஒரு அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 3 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 529 ரன்களை எடுத்து தொடர் நாயகன் விருது பெற்று அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் விரேந்திர சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே தொடரில் 544 எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ரோஹித் ஷர்மா 44 ஆவது இடத்தில் இருந்து 10 ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய அனைத்து வடிவங்களிலும் 10 இடத்துக்குள் வந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் இரண்டாம் இடத்திலும், டி 20 போட்டிகளில் 7 ஆவது இடத்திலும் உள்ளார்.