நாளை மீண்டும் சூரியன் உதயமாகும்; ரோகித் டுவிட்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (13:26 IST)
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விமர்சனத்துக்குள்ளான ரோகித் சர்மா தனது டுவிட்ட்டர் பகுதியில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரில் இந்திய அணியும், ஒருநாள் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன.
 
ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மாவின் பங்கு அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியாய் இருந்து வருகிறது.
 
ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் இந்திய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்து வருகிறது. ரோகித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தால் அணி தடுமாற்றம் காண தொடங்கி உள்ளது. அணிக்கு முக்கியமான பேட்ஸ்மேனாக உருவாகி ரோகித் சர்மா தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
 
இந்நிலையில் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், சூரியன் மீண்டும் உதயமாகும் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்