டிக் டாக்கில் கலக்கும் எமி ஜாக்சனின் சுட்டி பையன் - வீடியோ!

செவ்வாய், 31 மார்ச் 2020 (08:01 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார்.

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது செல்ல மகனுடன் டிக்டாக் செய்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஆண்ட்ரியாஸின் கியூட் எஸ்பிரஸன் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Succumbed to TIKTOK #selfisolation pic.twitter.com/LcHDwZhDYB

— Amy Jackson (@iamAmyJackson) March 30, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்