மழையால் முன்கூட்டியே முடிந்த முதல் நாள் ஆட்டம்: விக்கெட் இழக்காத இந்திய அணி!

புதன், 2 அக்டோபர் 2019 (16:28 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்துள்ளது
 
 
இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை விசாகப்பட்டிணத்தில் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஆகியோர் களமிறங்கினர் 
 
 
ரோகித் சர்மா 182 ரன்களும், மயாங்க் அகர்வால் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 60வது ஓவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. இதனை அடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. ரோகித் சர்மா அபார சதம் அடித்துள்ளார். அவருடைய சதத்தில் 12 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
தென்னாப்பிரிக்காவின் 5 முன்னணி பந்துவீச்சாளர்கள் மாறிமாறி பந்துவீசிய போதிலும் இந்திய அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது. நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா இரட்டை சதமும், மயங்க் அகர்வால் சதமும் அடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்