வடகிழக்கு இந்தியாவில் கனமழை – நான்கு மாதங்களில் 1673 பேர் பலி !

புதன், 2 அக்டோபர் 2019 (10:17 IST)
வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் மழை கடந்த 25 ஆண்டுகளில் பெய்த மழையை விட 10 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் கடுமையாக பெய்து வருகிறது. புனே, மும்பை, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பெய்துள்ள மழை 50 ஆண்டுகள் மழை பொழிவின் சராசரியை விட 10 சதவிகிதம் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கனமழையால் இதுவரை பல லட்சக் கணக்கான மாணவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இதுவரை 1,673 பேர்  உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவிலான உயிரிழப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்