ஐபிஎல் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்: அதிர்ச்சி தகவல்

திங்கள், 2 ஜனவரி 2023 (09:49 IST)
சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நலம் படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ரிஷப் பண்ட் முழுவதுமாக குணமாக மூன்று முதல் ஆறு மாத காலம் ஆகும் என்றும் அது வரை அவர் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
 
கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவ சிகிச்சைக்கு பின் நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்