விராட் கோலி புத்துணர்ச்சியை இழந்துவிட்டார்: ரவி சாஸ்திரி காட்டம்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:50 IST)
விராட் கோலி தனது புத்துணர்ச்சியை இழந்துவிட்டார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விராத் கோஹ்லி தொடர்ச்சியாக விளையாடியதால் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார் என்றும் அவருக்கு சில காலம் ஓய்வு தேவை என்றும் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
 
நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டாக்அவுட் ஆனார். இதனை அடுத்து அவரது ஆட்டம் குறித்து ரவிசாஸ்திரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
விராட் கோலிக்கு சில காலம் ஓய்வு தேவை என்றும் அது இரண்டு மாதங்களாக இருந்தாலும் சரி ஒன்றரை மாதங்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக அவருக்கு ஓய்வு தேவை என்றும் ஓய்வு எடுத்து வந்தால்தான் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்