இடது கை பேட்ஸ்மேனான இவர், 2009 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும், அதன் பின்னர் 19 வயதுக்கட்பட்டோருக்கான அணியிலும் இடம் பெற்றார்.
விஜய்ஹசாரே போட்டியில், ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் சதம் அடித்ததால், ரிங்கு சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். உத்தரப் பிரதேச அணிக்காக ரஞ்சிப் போட்டியில் விளையாடும் போது சுரேஷ் ரெய்னாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு குடோனில் தங்கிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு சுரேஷ் ரெய்னா தேடி வந்து உதவி செய்தாராம். ரெய்னாவை குறித்து ரிங்கு சிங் கூறியதாவது, நான் ரூ.30 முதல் ரூ.35 லட்சத்துக்கு மட்டுமே விலைபோவேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால், கொல்கத்தா அணி என்னை ஏலத்தில் எடுத்தது மகிழ்ச்சி.
ஒருநாள் கொல்கத்தா அணியின் அனைத்து வீரர்களும் ஹோட்டலில் தங்கி இருந்தோம். அப்போது, சுரேஷ் ரெய்னா என்னைத் தேடி வந்திருந்தார். எனக்கு வாழ்த்து தெரிவித்து, ஆலோசனைகளைக் கூறினார். எனக்கு இரு கிளவுஸ்களையும், கிரிக்கெட் பேட்டையும் பரிசாக அளித்துவிட்டு சென்றார் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.