ரோகித் ரெய்னா அதிரடியில் இந்திய அணி 176 ரன்கள் குவிப்பு

புதன், 14 மார்ச் 2018 (20:35 IST)
வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

 
இலங்கை, இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று இந்திய அணி இரண்டாவது முறையாக வங்காளதேச அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி இந்திய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் தவான் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் 35 ரன்கள் குவிந்திருந்த போது ஆட்டமிழந்தார். இதையடுத்து ரெய்னா ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். ரெய்னா வழக்கம் தனது அதிரடியான ஆட்டத்தை ஆடினார்.
 
அரைசதம் விளாசும் வரை பொறுமையாக ரோகித் பின்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ரெய்னா 47 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா ரன் அவுட்டானர். 20ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அதிகப்பட்சமாக 89 ரன்கள் குவித்தார்.
 
இதையடுத்து வங்காளதேசம் அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர கடின இலக்குடன் களமிறங்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்