இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தீபக் சஹார் வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முக்கியக் காரணம் என சொலல்ப்படுகிறது. இந்நிலையில் வீரர்களை வெற்றிக்குப் பின் அழைத்துப் பேசிய டிராவிட் நாம் நினைத்தது போல இலங்கை அணி மீண்டு வந்தது. ஆனால் நாம் சாம்பியன்களைப் போல விளையாடி வென்றோம். நாம் தோல்வி அடைந்திருந்தால் கூட நான் வருத்தப் பட்டு இருக்க மாட்டேன். ஆனால் கடைசி வரை போராட வேண்டும் என நினைத்தேன். அது கடைசியில் நடந்து வெற்றியாக அமைந்துவிட்டது. வெற்றி பெறாவிட்டாலும்கூட கடைசிவரை போராடுவது முக்கியம் எனப் பாராட்டி பேசியுள்ளார்.