2வது சுற்றிலும் வெற்றி: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வாரா பிவி சிந்து?

புதன், 28 ஜூலை 2021 (08:42 IST)
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஒலிம்பிக்கில் ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இன்று நடைபெற்ற பேட்மிட்டன் மகளிர் பிரிவில் பிவி சிந்து ஹாக்காங் நாட்டின் யீ நகன் செயுங் என்ற வீராங்கனையுடன் மோதினார், பிவி சிந்து மிக எளிதில் 21-9  21-16 என்ற புள்ளி கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று விட்டார்
 
காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிவி சிந்துவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2-வது சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது 
 
ஏற்கனவே இந்தியாவுக்கு மீராபாய் சானு மூலமாக ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் பிவி சிந்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத் தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்