பதக்கம் வென்ற ஹாக்கி அணியின் 8 வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:19 IST)
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியில் உள்ள 8 வீரர்கள் ரூபாய் ஒரு கோடி பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்திய ஹாக்கி அணி இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் பிரதமர் மோடி முக ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியில் மொத்தம் எட்டு பஞ்சாப் வீரர்கள் இருக்கும் நிலையில் அந்த எட்டு வீரர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து 8 ஹாக்கி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மற்ற வீரர்களுக்கும் அந்தந்த மாநில அரசுகள் விரைவில் பரிசுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்