இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (13:02 IST)
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அம்மாநில அரசு தலா  ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு. 

 
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதனை செய்துள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் பதக்கம் வெல்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று நடைபெற்ற இந்திய மற்றும் ஜெர்மனி அணிகளுக்கிடையிலான 3வது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடியது. ஆரம்பம் முதலே அதிக கோல்கள் வித்தியாசத்தில் இருந்த இந்திய அணி இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அம்மாநில அரசு தலா  ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்