ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதனை செய்துள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் பதக்கம் வெல்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று நடைபெற்ற இந்திய மற்றும் ஜெர்மனி அணிகளுக்கிடையிலான 3வது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடியது. ஆரம்பம் முதலே அதிக கோல்கள் வித்தியாசத்தில் இருந்த இந்திய அணி இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பெற்றுள்ள இந்தியாவுக்கு தற்போது மேலும் ஒரு வெண்கலம் கிடைத்ததை அடுத்து மொத்தம் இந்த ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 
 
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின் கூறியுள்ளதாவது, 41 ஆண்டு எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்திய ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது என இந்திய ஆடவர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்