டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:08 IST)
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதனை செய்துள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் பதக்கம் வெல்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று நடைபெற்ற இந்திய மற்றும் ஜெர்மனி அணிகளுக்கிடையிலான 3வது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடியது. ஆரம்பம் முதலே அதிக கோல்கள் வித்தியாசத்தில் இருந்த இந்திய அணி இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பெற்றுள்ள இந்தியாவுக்கு தற்போது மேலும் ஒரு வெண்கலம் கிடைத்ததை அடுத்து மொத்தம் இந்த ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்