விவசாயிகள் போராட்டம் பற்றி பேசிய பாடகி ரிஹானா… பிரக்யான் ஓஜாவின் கோபமான பதில்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (16:04 IST)
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போரட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக பேசிய பாப் பாடகி ரிஹானாவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரக்யான் ஓஜா பேசியுள்ளார்.

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஏற்கனவே சர்வதேச தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது சர்வதேச புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி மற்றும் நடிகை ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ’நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? என்று கேள்வி எழுப்பி தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் 

100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வைத்துள்ள பாப் பாடகி ரிஹானாவின் இந்த டுவிட் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் பிரக்யான் ஓஜா ‘எங்கள் நாடு விவசாயிகளைக் கண்டு பெருமை கொள்கிறது. அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கான தீர்வு விரைவில் காணப்படும். எங்கள் நாட்டு விவகாரங்களில் வெளியாட்கள் மூக்கை நுழைக்க தேவையில்லை’ எனக் கூறியுள்ளார். ஓஜாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவும் கிடைத்து வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்