9 விரல்களோடு கீப்பிங் செய்த இந்திய வீரர்! பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான அதிர்ச்சி தகவல்!

செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:16 IST)
இந்திய அணியில் தோனிக்கு முன்னதாக அறிமுகமான பர்தீவ் படேல் தோனியின் வருகையால் தனக்கான வாய்ப்பை இழந்தார்.

இந்திய அணி கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்தபோது அவர் கண்டுபிடித்த இளம் வீரர்களில் ஒருவராக இருந்தவர் பர்தீவ் படேல். கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 16 வயதில் பர்தீவ் அறிமுகமானார். ஆனால் இந்திய அணியில் தோனி அறிமுகமான பின்னரும் அவரே கேப்டனான பின்னரும் அதன் பின்னர் பர்தீவ் படேலுக்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வரும் பர்தீவ் படேல் பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பர்தீவ் படேல் தனது சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் ‘நான் ஒன்பது விரல்களோடு மட்டுமே கீப்பிங் செய்து வந்தேன். எனக்கு 6 வயது இருக்கும் போது எதிர்பாராத விதமாக கதவிடுக்கில் என் இடது கை சுண்டுவிரல் கதவிடுக்கில் மாட்டி துண்டானது. 9 விரல்களுடன் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடியது பெருமையளிக்கிறது.

சுண்டுவிரல் இல்லாததால் கீப்பிங் செய்வது கடினமாக இருந்தது. அதனால் டேப் போட்டு ஒட்டிவிட்டுதான் கீப்பிங் செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்