ஆஷஸ் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகலா?... ஆஸி அணிக்குப் பின்னடைவு!

vinoth

புதன், 8 அக்டோபர் 2025 (12:38 IST)
கிரிக்கெட்டில் மிக நீண்டகால வரலாறு உள்ள தொடர்களில் ஒன்று ஆஷஸ். 140 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருமுறை இங்கிலாந்திலும் மற்றொரு முறை ஆஸ்திரேலியாவிலும் இந்த தொடர் நடக்கிறது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நீண்ட தொடராக நடக்கவுள்ளது. இதற்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போதே அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸி அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் அவர் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே அவர் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்