மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 30 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தோனிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆதரவை ஹீலி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
"மஞ்சள் நிறத்தில், குறிப்பாக தோனியின் சிஎஸ்கே ஜெர்சியை இந்திய ரசிகர்கள் அணிந்து வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும். அது கூட்டத்திற்கு ஒரு கூடுதல் அழகை கொடுக்கும்," என்று அவர் கூறினார். மேலும், தங்கள் அணியை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணியாக நினைப்பதற்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் விளையாடுவது குறித்துப் பேசிய ஹீலி, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானது என்றும், இங்கு ரசிகர்கள் தரும் ஆதரவு உற்சாகமளிப்பதாகவும் தெரிவித்தார்