மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
ஆனால் தற்போது கார்த்தி, தமிழ் இயக்கும் மார்ஷல் படத்துக்கு நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி அவதார் 3 உலகமெங்கும் ரிலீஸாகும் நாளில் வா வாத்தியார் ரிலீஸ் ஆகவுள்ளது.