இதனையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. காரைக்குடி அணி கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதாவின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா 93 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார்.