மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
புதன், 30 மார்ச் 2022 (12:30 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது என்பது தெரிந்ததே
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹீலே அபாரமாக விளையாடி 129 ரன்கள் எடுத்தார்
இதனை அடுத்து 306 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 37 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது