பாரீஸ் ஒலிம்பிக் 2024.. ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது !

Mahendran
புதன், 17 ஏப்ரல் 2024 (12:02 IST)
33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உள்பட 200 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்
 
 இந்த நிலையில் 33 வது ஒலிம்பிக் போட்டிக்கான கவுண்டவுன் தொடங்குவதை குறிக்கும் வகையில் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. நேற்று இந்த ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட போது ஒலிம்பிக் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கிரீஸ் நாடு முழுவதும் இந்த ஒலிம்பிக் தீபம் சுமார் 5000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் என்றும் அதன்பிறகு பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம்  இந்த தீபம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
அதன் பிறகு பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து 400 நகரங்களுக்கு இந்த ஒலிம்பிக் தீபம் பயணம் செய்யும் என்று கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்