300 ரன்களுக்கும் மேல் இலக்கு கொடுத்த நியூசிலாந்து .. நெதர்லாந்து சமாளிக்குமா?

திங்கள், 9 அக்டோபர் 2023 (18:29 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும்  நெதர்லாந்து அணிகள் விளையாடி வரும் நிலையில், முதலில்  பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300க்கும் மேல் ரன்கள் எடுத்துள்ள நிலையில் தற்போது நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.  
 
நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் 70 ரன்களும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 51 ரன்களும் எடுத்துள்ளனர். கேப்டன் டாம் லாதம் அபாரமாக விளையாடி 53 ரன்கள் எடுத்துள்ளார். 
 
இந்த நிலையில் தற்போது 323 என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்த இமாலய இலக்கை எட்டுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 முன்னதாக நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை  9 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி வெற்றி பெற்றது என்பதும் அதேபோல் நெதர்லாந்து பாகிஸ்தானிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வென்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்