இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் என்று தத்தளித்து கொண்டிருந்த நிலையில் முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகில் ஆகிய இருவரும் அணியை ஓரளவுக்கு நிமிர்த்தினர். இருவரும் தலா 68 ரன்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.