நியுசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துவிட்டு இப்போது டி 20 தொடரை விளையாடி வருகிறது. இன்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஹபீஸை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினர். மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய ஹபீஸ் 57 பந்துகளில் அதிரடியாக 99 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பாக் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களமிறங்கிய நியுசி அணி குப்தில் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார் டிம் செய்ஃபெர்ட். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி கடைசி வரை அவுட் ஆகாமல் வெற்றிக்கு தேவையான 163 ரன்களை எட்டினர். செய்பெர்ட் 83 ரன்களும் வில்லியம்சன் 57 ரன்களும் சேர்த்தனர்.