வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

vinoth

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (08:53 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டர்சன் –டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்புடன் ஒரு டி20 தொடர் போல விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வென்று தொடர் சமனில் முடிந்துள்ளது. மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி இந்த தொடரை சமனில் முடித்ததே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியின் பலத்தை நிரூபித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர் முடிந்ததும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “நாங்கள் சில நேரம் வெற்றி பெறுவோம். சில நேரம் தோல்வி அடைவோம். ஆனால் ஒரு போதும் சரணடையமாட்டோம். சிறப்பான செயல்பாடு வீரர்களே” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்